தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹபராதுவ பிரதேச சபை தலைவர் பதவி விலகல்
தேசிய மக்கள் சக்தியின்(NPP) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹபராதுவ(Habaraduwa) பிரதேச சபையின் தலைவர் ஹர்ஷ மனோஜ் கார்டியா புஞ்சிஹேவா(Harsha Manoj Cardia Punchihewa) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமா கடிதம் ஹபராதுவ பிரதேச சபையின் செயலாளர் இரேகா தில்ருக்ஷியிடம்(Rekha Dilrukshi) சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைவர் ஹர்ஷ மனோஜ் கார்டியா புஞ்சிஹேவா பதவி விலக முடிவு செய்தது தனிப்பட்ட காரணங்களுக்காக என்று தெரிவிக்கப்படுகிறது.




