இலங்கை

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பெண்ணுக்கு நடந்த கொடூரம் – வர்த்தகர் கைது!

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர் விசாவில் இளைஞர்களை மேலதிக கல்விக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் நிறுவனத்தை கொழும்பில் நடத்தி வந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் யுவதியும் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு கோடீஸ்வர வர்த்தகர் இந்த யுவதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோடீஸ்வர தொழிலதிபரின் அறிவிப்பின் பேரில் அந்த இளம் பெண்ணும் அதே ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். சந்தேக நபர் ஹோட்டலில் சந்திப்பு மண்டபத்தை முன்பதிவு செய்திருந்ததாகவும், அந்த இளம் பணிப்பெண் மண்டபத்திற்குச் சென்றபோது கதவு மூடப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இளம் பெண் குழந்தை மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார். யுவதியின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!