ஆஸ்திரேலியா சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் – 3 இளைஞர்கள் அதிரடியாக கைது
ஆஸ்திரேலியா – மெல்பேர்னின் வடமேற்கு பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை செய்ததாக 03 இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜூன் 26 ஆம் திகதி, செயின்ட் ஆல்பன்ஸில் இரண்டு நண்பர்களுடன் அவர் பயணம் செய்தபோது, ஒரு கார் அவர் மீது மோதியது.
அப்போது, முகக் கவசம் அணிந்த இருவர் வெளியே வந்து குழந்தையை கூரிய ஆயுதங்களால் தாக்கியது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இருவர் மற்றும் 18 வயதுடைய இருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று சிறுவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.





