இந்தியா

15 மாதக் குழந்தையை நீரில் தூக்கிவீசிக் கொலை செய்த கொடூர தாய் – கைது செய்த பொலிஸார்!

கர்நாடகா மாநிலம், ராமநகர் மாவட்டத்தில் 15 மாத ஆண் குழந்தையை நீரில் தூக்கிவீசி கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம், ராமநகர் மாவட்டம், பனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம்மா (21). இவர் இன்று காலை துணி துவைக்க செல்வதாக கூறி அருகில் உள்ள கனவா நீர்த்தேக்கத்துக்கு தனது 15 மாத ஆண் குழந்தை தேவராஜூடன் சென்றார்.

இந்நிலையில், மாலையில், குழந்தை தேவராஜ், நீரில் தவறி விழுந்து விட்டதாக பாக்கியம்மா அழுது கொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார். அந்த பெண்ணை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, பாக்கியம்மா முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பாக்கியம்மா தனது குழந்தையை நீரில் தூக்கி வீசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் குழந்தையை ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

ஆனால், தகாத தொடர்பில் இந்த குழந்தை பிறந்ததால் நீரில் வீசி கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் தரப்பி்ல் தெரிவித்துள்ளனர். பெற்ற குழந்தையை நீரில் வீசி தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!