இலங்கை குறித்த சர்ச்சை காணொலியை வெளியிட தயாராகும் பிரித்தானிய ஊடகம்!
இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை நாளை (09.04) ஒளிபரப்ப பிரித்தானியாவின் சனல் நான்கு ஊடகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஈ ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பேட்டி ஒன்றே இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் “சேனல் ஃபோர்” இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக பல சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி இலங்கையில் பிரபலமடைந்தது. இந்த ஊடகம் வெளியிட்ட சில காணொலிகளை அப்போது ஆட்சி செய்த இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் நாளை இலங்கை தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய காணொளியை ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளது.
நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த காணொலி தொடர்பான விடயங்கள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.