வரிசெலுத்துவோரின் பணத்தை புகலிட விடுதிகளுக்காக செலவழிக்கும் பிரித்தானிய அரசாங்கம்!
பிரித்தானிய அரசாங்கம் வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான பவுண்டுகளை புகலிட விடுதிக்காக செலவிட்டுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்பார்க்கப்படும் செலவுகள் மூன்று மடங்காக அதிகரித்து £15 பில்லியனைத் தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அவர்களை பராமரிப்பதற்காக அரசாங்கம் பல பில்லியன் பவுண்டுகளை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டில் வரி செலுத்துவோரின் சொத்துக்களை வீணடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
என்னதான் புதிய திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டாலும் அவை பலனளிப்பதாக தெரியவில்லை.
சுமார் 32,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்போது 210 ஹோட்டல்களில் வசித்து வருகின்றனர், அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் போது, அரசாங்கத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் £5.5 மில்லியன் செலவாகுவதாக உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2029 ஆம் ஆண்டிற்குள் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடுதிகளில் தங்குவதை முடிவுக்கு கொண்டுவருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் வரி செலுத்துவோரின் பணத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





