ஐரோப்பா

கஸன் நகரில் ரஷ்யாவின் தலைமையில் தொடங்கியுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாடு

ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சிமாநாடு இன்று தொடங்குகிறது.சீனா,இந்தியா, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பதால் இந்த உச்சிமாநாடு, தற்போதைய சர்வதேச சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் கஸன் நகரில் BRICS நாடுகளின் உச்சிமாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.பிரேசில் ,ரஷ்யா , இந்தியா,சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா எனத் தொடங்கிய இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு, கடந்த ஜனவரி முதல் மேலும் பல உறுப்பு நாடுகளுடன் விரிவாகி இருக்கிறது.

ஈரான்,்கிப்து ,எத்தியோப்பியா,ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் பிரிக்ஸ் அமைப்பு விரிவாகி உள்ள நிலையில், துருக்கி,அர்பைஜன்,மலேசியா ஆகிய நாடுகளும் உறுப்பினராக சேர விண்ணப்பித்துள்ளன. இதனை பிரிக்சின் முக்கிய வெற்றியாக ரஷ்யா பார்க்கிறது. கசனில், அக்டோபர் 22, 23 திகதிகளில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் 32 நாடுகள் பங்கேற்க உள்ளதாகவும், 20க்கும் அதிகமான நாடுகள் தங்கள் நாடுகளின் தலைவர்களை அனுப்புவதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைன் போர், புதினுக்கு எதிரான சர்வதேச கைது வாரண்ட் ஆகியவற்றுக்கு மத்தியில் கூடும் இந்த உச்சிமாநாட்டில், பொருளாதார முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 20 நாட்டு தலைவர்களுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்த உள்ளார். மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் தனக்கான ஆதரவை திரட்டும் முயற்சியாக ரஷ்யாவுக்கு இந்த உச்சிமாநாடு அமைகிறது.

போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களுக்கு தீர்வு காணும் முயற்சியாகவும் அமைகிறது. பிரிக்சின் முக்கிய நாடுகளான இந்தியா, சீனாவுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாகவும் ரஷ்யா பார்க்கிறது. மற்ற நாடுகள், பரஸ்பர உறவை வலுப்படுத்திக்கொள்வதோடு தங்கள் குரலையும், கருத்தையும் வெளிப்படுத்துவதற்கான தளமாக இந்த உச்சிமாநாடு பார்க்கப்படுகிறது.

(Visited 42 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!