செய்தி விளையாட்டு

ஊழியர்களை பாராட்டி பரிசு தொகை வழங்கிய BCCI செயலாளர்

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 2 மாத காலமாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த இந்த தொடர் கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்த உதவிய மைதானங்களுக்கு BCCI செயலாளர் ஜெய் ஷா பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.

அதன் படி இறுதிப்போட்டி நடைபெற்ற சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஐதராபாத், முல்லான்பூர், பெங்களூரு, ஜெய்ப்பூர், லக்னோ, குஜராத் ஆகிய 10 முதன்மை மைதானங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

அத்துடன் விசாகப்பட்டினம், கவுகாத்தி, தர்மசாலா ஆகிய 3 நகரங்களில் உள்ள மைதானங்களில் கணிசமான போட்டிகள் நடைபெற்றன.

அந்த 3 மைதானங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை கொடுக்கப்படுவதாகவும் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்காக பாடுபட்ட மைதான ஊழியர்களை பாராட்டும் வகையில் இந்த பரிசுத்தொகை கொடுக்கப்படுவதாகவும் ஜெய் ஷா கூறியுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி