பிரித்தானியாவில் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி அரசியல்வாதியின் மோசமான செயல்
முன்னாள் பிரிட்டிஷ்(British) நகர கவுன்சிலர் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தெற்கே பிரித்தானியாவில் உள்ள ஸ்விண்டன்(Swindon) பெருநகர கவுன்சிலில் பணியாற்றிய 49 வயதான பிலிப் யங்(Philip Young), 2010 மற்றும் 2023க்கு இடையில் முன்னாள் மனைவி ஜோன் யங்கிற்கு(Joan Young) எதிராக 48 குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
வின்செஸ்டர் கிரவுன்(Winchester Crown) நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் கன்சர்வேடிவ்(Conservative) கட்சி அரசியல்வாதி, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
மேலும், பிலிப் யங் தனது முன்னாள் மனைவியின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.




