இலங்கை செய்தி

சட்டமா அதிபர் ஓய்வு பெற்றார்

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலம் கடந்த 27ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

பல வருடங்களாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய திரு.சஞ்சய் ராஜரத்தினம் அவர்கள் ஓய்வுபெறுவதை முன்னிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அவருடன் சிறிது காலம் பணியாற்றிய அவரது நண்பர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட விருந்துபசாரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக் காலத்தை 06 மாதங்களுக்கு நீடிக்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பரிந்துரைகளை இரண்டு தடவைகள் அரசியல் அமைப்பு பேரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

எனினும், இரண்டு சந்தர்ப்பங்களிலும், அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்தது.

ஜனாதிபதியின் பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவை நிராகரித்ததன் காரணமாக அட்டர்னி ஜெனரல் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டியதாயிற்று.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!