ஜனாதிபதி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க அறிவித்தார்.
அவ்வாறானதொரு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே மேலும் தெரிவித்தார்.
(Visited 5 times, 1 visits today)