ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் கைது!

தமது பேஸ்புக் கணக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பதிவொன்றை பதிவிட்டிருந்த இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் எப்பாவல, மெதியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் “இந்த நாட்டை சீரழித்த நபர் எமது பகுதிக்கு வருகின்றார். ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்றை பெற்றுக் கொள்ள முடியுமா?” என முகநூலில் குறித்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)