Kia SUV வாகனங்களை பயன்படுத்துவோருக்கு அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!
அமெரிக்காவில் சுமார் 463,000 Kia (000270.KS) உரிமையாளர்கள், தீ அபாயங்களுக்கான ரீகால் ரிப்பேர் கிடைக்கும் வரை கட்டிடங்களுக்கு வெளியேயும் விலகியும் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக வெப்பமடைவதால் ஏற்படும் தீ அபாயங்கள் காரணமாக 2020 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் வெளிவந்த டெல்லூரைடு ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை திரும்பப் பெறுவதாக கொரிய வாகன உற்பத்தியாளர் நேற்று (07.06) அறிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் திரும்பப்பெறும் பணிகள் முடியும் வரை உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வெளியே வாகனங்களை நிறுத்துமாறு கோரப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை “பவர் சீட் ஸ்லைடு குமிழ் சிக்கியதால் முன் பவர் சீட் மோட்டார் அதிக வெப்பமடையக்கூடும், இது நிறுத்தப்படும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது தீ ஏற்படலாம்” என்று NHTSA தெரிவித்துள்ளது.