தமிழ்நாடு

தொலைபேசி மீதிருந்த மோகத்தால் மாணவி செய்த செயல் ; காப்பாற்றிய பொலிஸார்!

தமிழகம், காரைக்குடியில் செல்போனுக்காக 2வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற 17 வயது சிறுமியை பொலிஸார் கடும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன். இவரது 17 வயது மகள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லுாரிக்கு செல்ல இருந்தார்.மாணவி எந்நேரமும் மொபைலில் மூழ்கியிருப்பதைகண்ட தந்தை , கடுப்பாகி மொபைலை பறித்து வைத்த நிலையில் மகள் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து 2வது மாடிக்கு ஏறியுள்ளார்.

இதனைடுத்து பரபரபடைந்த அயலவர்கள் மாணவி கீழே விழுந்தால் அடிபடாத வகையில் மெத்தை போட்டு காப்பாற்ற தாயராக இருந்தனர். ஒரு மணி நேரமாக சிறுமியிடம் சமாதானம் செய்ய முயன்றபோது இறங்கி வர மாணவி மறுத்து அடம்பிடித்தார்.

தொலைபேசி மோகத்தால் தற்கொலைக்கு முயன்ற மாணவி; கடும்பிரயத்தனப்பட்டு காப்பாற்றிய பொலிஸார்! | Student Attempted Suicide Due To Phone Addiction

தகவலறிந்து வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மாணவியிடம் இறங்குமாறு கூறியபோதும், குதித்து விடுவேன் என அவர் மிரட்டல் விடுத்தார்.

அப்போது தீயணைப்பு வீரர்களுடன் அருகில் சென்ற பெண் பொலிஸ் ஒருவர் மாணவியுடன் பேசுவது போல அருகில் சென்று மாடியில் இருந்து குதிக்க முயன்ற மாணவியை கெட்டியாக பிடித்து ,சிறுமிக்கு அறிவுரைகளை வழங்கி தந்தையிடம் ஒப்படைத்தனர்.

தற்போதைய காலத்தில் வளரும் பிள்ளைகள் கைகளில் செல்போன் அவர்களை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இனியேனும் பிள்ளைகளிற்கு செல்போன் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் அவதானமாயிருங்கள்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்