இலங்கையில் 8 வருடங்கள் சக்கர நாற்காலியில் பாடசாலை சென்ற மாணவியின் சாதனை

பாணந்துறை எட்டு வருட காலம் சக்கர நாற்காலியில் பாடசாலை சென்ற மாணவி உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
பாணந்துறை அகமெதி பாலிகா தேசிய பாடசாலையின் (மாற்றுத்திறனாளி) மாணவி லக்ஷிகா பவனி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வணிகத்துறையில் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்.
இந்த மாணவியின் இடுப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் துரதிர்ஷ்டவசமாக நடக்க முடியாத நிலைக்கு மாணவி ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சக்கரநாற்காலியின் உதவியில் எட்டு வருட காலம் பாடசாலைக்குச் சென்று கல்வியை முன்னெடுத்துள்ளார்.
உடல் அங்கவீனத்தை கல்விக்கு இடையூறாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனத் தெரிவிக்கும் இவர், சிறந்த கணக்காளராக நாட்டுக்கு சேவையாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
(Visited 80 times, 1 visits today)