வாழ்வியல்

எலும்புகளை அழிக்கும் மிக மோசமான 5 உணவுகள்

உடல் ஆரோக்கியத்தின் ஆதாரமாக விளங்கும் எலும்புகளை எப்போதும் பலப்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்து, சரியான உணவு முறைகளை பின்பற்றினால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இப்போதைய காலகட்டத்தில் எலும்பு ஆரோக்கியத்துக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் பல வகையான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

அந்தவகையில் எலும்புகளையே பாதிக்கும் முக்கிய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எலும்பு புற்றுநோய், குறைந்த எலும்பு அடர்த்தி, எலும்பு தொற்று, ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோனெக்ரோசிஸ், ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோமலாசியா போன்ற பல நோய்கள் எலும்புகளை சீரழிக்கும். சில நோய்கள் மரபணு காரணமாக ஏற்பட்டாலும், அன்றாடம் நாம் செய்யக்கூடிய சில தவறுகளும் எலும்பு ஆரோக்கியத்தை கெடுப்பவையாக இருக்கின்றன.

குறிப்பாக உணவு முறை. அதில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தும் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது கால்சியம். இந்த கால்சியம் தவறான உணவு முறைகளால் தட்டுப்பாடு ஏற்படும். மிக முக்கியமாக கீழே சொல்லப்படும் 5 உணவுகளை எடுத்துக் கொள்வதில் இருந்து மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

எலும்புகள் ஆரோக்கியத்தை பாதிக்கும் 5 உணவுகள்

டீ காபி :

இந்தியாவில் டீ, காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு பஞ்சமில்லை, நம்மில் பலர் நம் நாளை டீ காபி குடிப்பதில் இருந்துதான் தொடங்குகிறோம், ஆனால் அவற்றில் அளவு அதிகமாக இருக்கும் காபின் எலும்புகளுக்கு எதிரி. அவை எலும்புகளை கடுமையாக பாதிக்கும். இதனால் எலும்பின் அடர்த்தி குறையும். எனவே இது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

இனிப்பு உணவு :

இனிப்பு உணவுகள் நீரிழிவு நோயை மட்டுமே ஏற்படுத்தும் என பலரும் கருதிக் கொண்டிருக்கிறோம். உடலின் இன்சுலின் சுரப்பில் மாற்றம் ஏற்படுத்தும் செயற்கை இனிப்புகள் தான் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிப்பவையாக இருக்கின்றன. எலும்புகளை பாதிக்கும் இனிப்புகளை சரியான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே நீரிழிவு நோய் இருப்பவர்கள் தவிர்ப்பது கூட நல்லது தான்.

மதுபானம்

ஆல்கஹால் பல நோய்கள் மற்றும் தீமைகளின் வேர் என்றாலும், அது எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக, எலும்புகளின் வளர்ச்சி நின்று, எலும்பின் அடர்த்தியும் குறையத் தொடங்குகிறது. இதனால் சாதாரண அசைகளில் கூடஎலும்பு முறிவு ஏற்படும். எனவே, எலும்புகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் மது வகைகளை நுகர்வதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு பொருட்கள்

சோடியம் நமது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. உப்பு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதில், எலும்புகள் மெல்லியதாகவும் பலவீனமாகவும் மாறும், இதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்றவற்றிலிருந்து எப்போதும் விலகி இருங்கள்.

சோடா பானம்

சோடா பானம் எப்போதும் உடலுக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாக நீங்கள் சோடா பானங்களை சாப்பிடும்போது மிகப்பெரிய பின்விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். வாய்வு பிரச்சனை முதல் எலும்பு ஆரோக்கியம் கெடுவது வரை மிக மோசமான சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். சோடா பானங்கள் தீங்கானவை. அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடும்போது செரிமானத்துக்காக சோடா குடிப்பார்கள். ஆனால், அதனால் ஏற்படும் சிக்கல் உடனே உங்களுக்கு தெரியாது. நாட்பட்ட அளவிலேயே புரிந்து கொள்வீர்கள். அதனால், எப்போதும் இயற்கை பழச்சாறுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான