கோலாகலமாக ஆரம்பமான 2025ம் ஆண்டிற்கான IPL தொடர்

ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் இன்று கோலாகல கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக்கான் உரையுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது.
அதன்பின் பாடகி ஷ்ரேயா கோஷல் இசைக்கலைஞர்களுடன் பாடல்கள் பாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
புஷ்பா, ஆயுத எழுத்து உள்ளிட்ட பல்வேறு பட பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ரஹ்மான் இசையில் உருவான வந்தே மாதரம் பாடலை இந்தியில் பாடி அசத்தினார்.
அதன்பின் ரசிகர்களை கிரங்க வைக்கும் வகையில் நடிகை இஷா பதானியின் கவர்ச்சி நடனம் இடம் பெற்றது.
பின்னர் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா மேடையில் ஆடிக்கொண்டே பாடல் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
(Visited 28 times, 1 visits today)