“எங்களுக்கு புக்க வேண்டாம்: அந்த செம்மறிக்கு கதைக்க தெரியவில்லை” – சபையில் அர்ச்சுனா!
அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களையே யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக என்.பி.பி. அரசாங்கம் வைத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Archuna குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“உணவு, உடை, உறையுள் என்பனவே அடிப்படை தேவைகள் என்பது தரம் ஒன்று மாணவருக்குகூட தெரியும்.
ஆனால் உணவு, உறையுள், வீடு என ஜனாதிபதியின் மேடையில் இருந்துகொண்டு செம்மறியொன்று கூறுகின்றது. இப்படியான செம்மறிகளையே யாழ்.மாவட்ட எம்.பிக்களாக என்.பி.பி. அரசாங்கம் வைத்துக்கொண்டுள்ளது.
உணவு, உடை, உறையுள் என்பதைக்கூட சரியாக சொல்ல முடியாதவர்களை வைத்துகொண்டு என்ன செய்வது?
ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து புக்க (பொங்கல்) வழங்கிவிட்டு சென்றுள்ளார், நாம் புக்க கேட்கவில்லை.
வலி.வடக்கில் உள்ள காணிகளை விடுவியுங்கள். இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துங்கள், ஆனந்த சுதாகரன் போன்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்றே நாம் கேட்கின்றோம்.
இவற்றை செய்யாமல், புக்க (பொங்கல்) வழங்கி என்ன பயன்?” – என்றார் அர்ச்சுனா எம்.பி.





