தலைவர் 171 கதை இதுதான்.. கெளதம் மேனன் கூறிய ட்விஸ்ட்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து ரஜினியின் தலைவர் 171 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவித்தது.
அதன்படி, ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் காம்போ முதன்முறையாக இணையும் தலைவர் 171 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தப் படம் LCU-ன் கீழ் வராது என உறுதியாக கூறிவிட்ட லோகேஷ், அடுத்த வாரம் முதல் தலைவர் 171 ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் தொடங்குவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே தலைவர் 171 படம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் அப்டேட் கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் கெளதம். லியோ ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போது தான் தலைவர் 171 படம் கன்ஃபார்ம் ஆனது. இதனால், தலைவர் 171 படம் குறித்து கெளதம் மேனனிடம் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தாராம்.
இதுபற்றி தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள கெளதம், தலைவர் 171 படத்தின் கதை தனக்கு முழுமையாக தெரியும் என்றுள்ளார். தனக்கு மட்டும் அல்லாமல் லோகேஷின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் 10 இயக்குநர்களுக்கும் தலைவர் 171 கதை தெரியும் என கெளதம் மேனன் கூறியுள்ளார். ஆனால், என்ன ஜானர் கதை என்றோ, அதன் பின்னணி பற்றியோ வாய் திறக்கவில்லை கெளதம் மேனன்.
அதேபோல், லோகேஷ் கனகராஜ் 100 படங்கள் வரை இயக்குவார் எனவும் கெளதம் மேனன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். முன்னதாக மொத்தமே 10 படங்கள் வரை மட்டுமே இயக்குவேன் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.