தலைவன் தலைவி வசூல் 100 கோடியை கடந்தது… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தலைவன் தலைவி படத்தின் வசூல் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கணவன் – மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது.
தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதனிடையே, தலைவன் தலைவி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளைத் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக வெளியிட்டது.
இந்நிலையில், இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)