தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சினின் தண்டனை ஓராண்டாகக் குறைப்பு!
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் எட்டு ஆண்டு சிறைத்தண்டனையை ஓராண்டாகக் குறைத்துள்ளதாக அரச வர்த்தமானி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி, 2006 இல் இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட பின்னர் சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தாய்லாந்துக்குத் திரும்பினார்.
அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் வந்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து சிறைக்கு மாற்றப்பட்டார். முதல் நாள் இரவு, நெஞ்சுவலி மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக போலீஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
வியாழக்கிழமை அவர் அரச மன்னிப்பு கோரிக்கையை சமர்ப்பித்தார்.
தக்சின் “ஒரு பிரதமராக இருந்தார், நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்துள்ளார் மற்றும் முடியாட்சிக்கு விசுவாசமாக இருந்தார்” என்று அரச வர்த்தமானி வெள்ளிக்கிழமை கூறியது.