அமெரிக்காவில் 120,000 மாடல் S மற்றும் X கார்களை திரும்பப்பெறும் டெஸ்லா நிறுவனம்!
அமெரிக்காவில் உள்ள 120,000 மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் வாகனங்களை டெஸ்லா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
விபத்தின்போது கதவுகள் தானாக திறப்பதற்கான வாய்ப்பிருப்பதாக கூறி, பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் 2021-2023 ஆண்டுக்கான ஓவர்-தி-ஏர் (OTA) மென்பொருள் புதுப்பிப்பை வெளியிட்டது. இது பக்க-தாக்கப் பாதுகாப்பிற்கான கூட்டாட்சி பாதுகாப்பு தரங்களுடன் இணங்கவில்லை என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (23.12) இடம்பெற்ற விபத்தில், கதவுகள் தானாக திறப்பதை கண்டதாகவும், சோதனைகளில் கவனக்குறை பிழை இருப்பதை கண்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.