துருக்கியில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
இஸ்தான்புல்லில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்திய இருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த இருவர் துருக்கி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் புரட்சிகர மக்கள் விடுதலைக் கட்சி முன்னணி (DHKPC) உறுப்பினர்கள் என்று உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.
1980களில் இருந்து துருக்கியில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வரும் இடதுசாரிக் குழு இது. அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் இந்தக் குழு, மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமெரிக்காவின் செல்வாக்கிற்கு எதிராகப் போராடி வருகிறது.
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அடங்கிய குழு துருக்கிய இராணுவத்தால் கொல்லப்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ்காரர் கொல்லப்பட்டார். மூன்று பொதுமக்களும் காயமடைந்தனர்.
பரந்து விரிந்த நீதிமன்ற கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலுக்குச் செல்லும் சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு சவுதி கண்டனம் தெரிவித்துள்ளது.