இந்தியாவில் 3 தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த பயங்கரவாதி கொலை

2006 ஆம் ஆண்டு RSS தலைமையகம் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ரசாவுல்லா நிஜாமானி என்கிற அபு சைஃபுல்லா, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் அரசாங்கத்தால் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிஜாமானி, சிந்து மாகாணத்தில் உள்ள மாட்லியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கடவை அருகே தாக்குதல் நடத்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) தலைமையகம் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், லஷ்கர் செயல்பாட்டாளர் 2005 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத் தாக்குதலிலும், 2001 இல் ராம்பூரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலிலும் ஈடுபட்டிருந்தார்.