காசாவில் வெள்ளத்தில் மிதக்கும் கூடாரங்கள் – 12 பேர் உயிரிழப்பு!
காசாவில் நிலவும் தொடர் மழை மற்றும் சீரற்ற வானிலையின் காரணமாக ஏறக்குறைய 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மழை காரணமாக கூடாரங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், இதனால் மக்கள் பல்வேறு சுகாதார அபாயங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த கட்டிடங்களில் தங்க வேண்டாம் என்று அவசரகால ஊழியர்கள் மக்களை எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவில் மக்கள் தங்குவதற்கு பாதுகாப்பான சில இடங்களே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காசாவில் கிட்டத்தட்ட 80% கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது சேதமடைந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





