மடகஸ்காரில் (Madagascar) நிலவும் பதற்றம் – விமான சேவைகளை நிறுத்தும் ஏர் பிரான்ஸ்!

மடகஸ்காரில் (Madagascar) நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் காரணமாக அந்நாட்டிற்கான விமான சேவைகளை நிறுத்துவதாக ஏர் பிரான்ஸ்
(Air France) அறிவித்துள்ளது.
குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை வரை விமானங்கள் நிறுத்தப்படும் என AFP செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
விமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது கள நிலைமையின் தினசரி மதிப்பீட்டிற்கு உட்பட்டது எனவும் ஏர் பிரான்ஸ் (Air France) அறிவித்துள்ளது.
தண்ணீர், மின் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து அந்நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு இராணுவத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தீவிர போராட்டங்களால் அந்நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா (Andry Rajoelina) நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாரளுமன்றத்தை கலைக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அது செல்லாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு விமான சேவைகளை இடைநிறுத்த ஏர் பிரான்ஸ் (Air France) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி
மடகாஸ்காரில் (Madagascar) தீவிரமடைந்த போராட்டம் – நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி!