தொடரும் பதற்றம் : மீண்டும் தாக்குதலை தொடங்கிய தாய்லாந்து!
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான போர் இன்று மாலை முடிவடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தாய்லாந்து மற்றொரு தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து போர் விமான இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
“எங்கள் பிரதேசமும் மக்களும் இனி பாதிக்கப்படவோ அச்சுறுத்தப்படவோ இல்லை என்று நாங்கள் உணரும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும்” என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விரகுல் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி,
தாய்லாந்து, கம்போடியாவில் அமைதி திரும்பும் – நம்பிக்கையில் ட்ரம்ப்!





