வெனிசுலாவில் அதிகரிக்கும் பதற்றம் – ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!
வெனிசுலாவின் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
மத்திய கராகஸில் உள்ள மிராஃப்ளோரஸ் (Miraflores) அரண்மனையின் மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததாகவும், இரவு 8 மணியளவில் பாதுகாப்புப் படையினர் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் மதுரோவை வீழ்த்த அமெரிக்க படைகள் முன்னெடுத்த தாக்குதல் போன்று வலுவாக இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பிறகு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





