ஆசியா

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ;ஒரே நாளில் 90 பீரங்கி குண்டுகளை வீசிய வட கொரியா

வட கொரியா நேற்று (7) ஒரே நாளில் அதன் மேற்குக் கரையோரப் பகுதியில் உள்ள கடல் பகுதியில் இருந்து சுமார் 90 பீரங்கி குண்டுகளை வீசியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு எல்லைக் கோட்டிற்கு வடக்கே கடல்சார் பாதுகாப்பு மண்டலம், மஞ்சள் கடலின் கடல் எல்லை மற்றும் தென் கொரியாவின் எல்லைத் தீவான யோன்பியாங் ஆகிய இடங்களில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பீரங்கித் தாக்குதல்கள் நடந்ததைக் கண்டறிந்ததாக கூட்டுப் படைத் தலைவர்கள் (JCS) தெரிவித்தனர்.

எல்லையில் பதற்றத்தை குறைக்க வடிவமைக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு கொரிய நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒப்பந்தத்தின் கீழ் இந்த இடையக மண்டலம் அமைக்கப்பட்டது.எனினும் இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் தென் கொரிய ராணுவத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், தென் கொரிய ராணுவம் பதில் பயிற்சிகளை நடத்தத் திட்டமிடவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்.

Tensions surge as North Korea fires artillery for third consecutive day:  Kim's sister mocks, South Korea issues stern warning - Times of India

இந்த தாக்குதல்களினால் தென்கொரியா கடல் எல்லைக்கு அருகே பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக தென்கொரியாவின் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி, வடகொரியா நேற்று முன் தினம் திடீர் தாக்குதல் நடத்தியது.

சுமார் 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் முழங்கியதாக கூறப்படும் நிலையில், தீவில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறு தென்கொரியா உத்தரவிட்டது.அதனைத்தொடர்ந்து நேற்று மீண்டும் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி வடகொரியா தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்