ஐரோப்பா

லண்டனிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் ஏற்பட்ட பதற்றம் – ஒருவர் பலி – 30 பேர் காயம்

லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில்ஆ ட்டங்கண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான இந்த விமானம் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கடும் கொந்தளிப்பு ஏற்பட்ட போது, ​​கடுமையான வெப்பமண்டல இடியுடன் கூடிய ஒரு பகுதியின் வான்வெளிக்குள் போயிங் 777 விமானம் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பாங்காக் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமானத்தில் உள்ள அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மருத்துவ குழு தயாராக உள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!