கத்தாரில் இருந்து அயர்லாந்து சென்ற விமானத்தில் பதற்றம் : 12 பேர் படுகாயம்!

கத்தாரில் இருந்து அயர்லாந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக 12 பேர் காயமடைந்துள்ளனர்.
தோஹாவிலிருந்து புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானம் QR107 இல் இந்த அனர்ந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விமானம் டப்ளினில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டப்ளிங் விமான நிலையத்தில் சுகாதார சேவையாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ
இதேவேளை கடந்த வாரம் இங்கிலாந்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட பதற்றத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)