பாகிஸ்தானில் பதற்றம்! தேவாலயங்கள் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்நிலையில் இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீது மத துவேஷம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து ஜரன்வாலா மாவட்டத்தில் உள்ள ஏராளமான தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியதாக புகைபடங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவத்தில் 5 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்தப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை அவமதிக்கும் வகையில் அவதூறு பேசியதாகத் தெரிவைக்கப்படுகின்றது.
இதனையடுத்து துப்புரவுத் தொழிலாளியான அவரது வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உள்ளூர்வாசிகள் அப்பகுதியில் உள்ள தேவாலயங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் கிறிஸ்துவர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்முறைக் கும்பல் தேவாலயத்தின் மீது புனித சிலுவையை சாய்க்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகியதோடு . சில வீடியோக்களில் முஸ்லிம் மதகுருக்கள், பாகிஸ்தானில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்களே எடுக்க வேண்டும் எனத் தூண்டிவிடும் காட்சிகளும்
அதில் அடங்கியுள்ளன.