இலங்கை

கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு முன்பாக பதற்றநிலை..

கண்டி குடிவரவு குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெற வந்தவர்களுக்கு மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தூர இடங்களில் இருந்து வந்து கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக பல நாட்களாக காத்திருந்த ஒரு குழுவிற்கும் இன்று காலை அந்த இடத்திற்கு வந்த மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் தீவிர நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், வரிசையில் நின்று கடவுச்சீட்டு பெற வரும் நபர்களிடம், திட்டமிட்ட கும்பல் ஒன்று சட்டவிரோதமாக பணம் பறிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு கண்டியில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவதாக அங்கு வந்திருந்த மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆயிரத்தெட்டு இன்னல்களுக்கு மத்தியில் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்து நாட்டிற்கு அன்னியச் செலாவணியைக் கொண்டு வரும் இந்த மக்களுக்கு குறைந்தபட்ச சேவையையேனும் வழங்க குடிவரவு அதிகாரிகள் கண் திறப்பார்களா

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content