அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

பென்சில்வேனியாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மேடையில் இருந்து ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றப்பட்டார்.
மேடையை விட்டுச் செல்லும்போது அவரது காதில் ரத்தம் வழிவதைப் படங்களில் காண முடிகிறது.
எனினும் ட்ரம்ப் நலமுடன் இருப்பதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 33 times, 1 visits today)