பொழுதுபோக்கு

போதை பொருள் பார்ட்டியில் பிரபல நடிகை.. நடிகர் சங்கம் கொடுத்த ஷாக் நியுஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகை ஹேமா பெங்களூருவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹேமா உள்ளிட்ட 86 பேர் போதை பொருள் எடுத்து கொண்டு கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நடிகை ஹேமா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஹேமா, “நான் எதுவும் செய்யவில்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர்கள் என்னை என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். நான் போதை சாப்பிடவில்லை. நான் பெங்களூருவில். நான் ஹைதராபாத்தில் தான் இருந்தே. அங்கு பிரியாணி சமைக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளேன்.” என்று கூறினார். இந்த நிலையில் போதை விவகாரத்தில் சிக்கியதால் நடிகை ஹேமா நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்க தலைவர் மனோஜ் பேசிய போது “ ஹேமா போதை விருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒருவேளை அவர் நிரபராதி என்று வெளியே வந்தால் மீண்டும் அவரை சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

தற்போது 57 வயதாகும் ஹேமா தெலுங்கு சினிமாவில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஈரமான ரோஜாவே, அழகிய தமிழ்மகன், சத்யம், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!