இலங்கை

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அருகிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுவதாக அருண் ஹேமசந்திரா குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் பிரதியமைச்சர் தமது பேஸ்புக் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில் இலங்கைப் பிரஜைகளுக்கு ஆதரவளிக்க மத்திய கிழக்கில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களும் 24/7 அவசர தொடர்பு இலக்கங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அவசரநிலை தொடர்பான விடயங்களுக்கு மாத்திரமே இந்த தொடர்பு இலக்கங்களைப் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தொடர்பு இலக்கங்கள்

இலங்கைத் தூதரகம் – இஸ்ரேல்

+94 71 844 7305 – துணைத் தூதரகத் தலைவர்

+94 71 683 3513 – ஆலோசகர் (தொழிலாளர் நலன்)

+94 71 974 2095 – செயலாளர் (தொழிலாளர் நலன்)

இலங்கைத் தூதரகம் – தெஹ்ரான்

+98 939 2055161 – கே.ஜி.யு. லக்மால், பொறுப்பாளர்

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்