இலங்கை

மன்னார் – செட்டிக்குளம் பகுதியில் யானைகளால் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு!

செட்டிக்குளம் மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கம்பங்களை காட்டு யானைகள் அடித்து நொருக்கி சேதப்படுதிய சம்பவம் இன்று (18.04) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு கிலோமீற்றர் முன்பாக டயலொக் மற்றும் மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினரால் அமைக்கப்பட்ட பதினாறு தொலைத்தொடர்பு கம்பங்களை யானைகள் உடைத்து துவம்சம் பண்ணியுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்று திருத்தல் பணிகளை மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மை காலங்களாக காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதும் , பயிர் நிலங்களை சேதப்படுத்துவதுமான நிலை ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!