பிரித்தானியாவில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்களால் பதின்மவயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்கள் கத்தி குத்து தாக்குதலுக்கு அதிகளவில் இலக்காகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்பு தெருக்களில் அரங்கேறிய வன்முறை சம்பவங்கள் தற்போது பாடசாலைகளுக்குள் இடம்பெற்று வருவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டேனியல் அன்ஜோரின், 14, ஏப்ரல் 30 அன்று கிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட்டில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டார்.
அதேபோல் கடந்த வாரம் ஷெஃபீல்டில் உள்ள ஒரு பள்ளியில் ‘உடைந்த பாட்டிலால் தாக்கப்பட்டு குழந்தை ஒன்று உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
வெல்ஷ் பள்ளி ஒன்றில் ஒரு மாணவர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கத்திக்குத்து தாக்குதலுக்கு பலியாகினர். இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் மக்களை பீதியில் உறையவைத்துள்ளன.
மார்ச் 2023 வரையிலான ஆண்டில் 25 வயதிற்குட்பட்ட 78 இளைஞர்கள் கத்தி அல்லது கூரிய பொருளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள தகவலின் படி பதின்மவயதினர் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் “வன்முறையின் உண்மைகள் மற்றும் மாற்று வழிகளைப் பற்றி குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குக் கற்பிக்காத வரையில் கத்திக் குற்றங்கள் அதிகரிக்கும் என விளக்குகின்றனர்.