நியூயார்க் அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியங்களை சேதப்படுத்திய இளைஞர் கைது
நியூயார்க்(New York) நகரத்தில் உள்ள மெட்ரோபொலிட்டன்(Metropolitan) கலை அருங்காட்சியகத்தில், நூற்றாண்டுகள் பழமையான இரண்டு புகழ்பெற்ற ஓவியங்கள் மீது தண்ணீரை ஊற்றியதற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பர் ஈஸ்ட் சைடில்(Upper East Side) உள்ள அருங்காட்சியகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 19 வயது ஜோசுவா வாவ்ரின்(Joshua Wavrin) என்ற இளைஞர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாவ்ரின் சேதப்படுத்திய ஓவியங்களில் ஒன்று “பிரின்செஸ் டி ப்ரோக்லி”(Princesse de Broglie), இது பிரெஞ்சு ஓவியக் கலைஞர் ஜீன் அகஸ்டே டொமினிக் இங்க்ரெஸின்(Jean Auguste Dominique Ingres) 19ம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாகும்.

இரண்டாவது ஓவியம் இத்தாலிய கலைஞர் ஜிரோலாமோ டாய் லிப்ரியின்(Girolamo dai Libri) 16ம் நூற்றாண்டின் பலிபீடமான “மடோனா அண்ட் சைல்ட் வித் செயிண்ட்ஸ்”(Madonna and Child with Saints) ஆகும்.
இந்நிலையில், கலைப்படைப்புக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாகவும், இளைஞர் ஏன் அந்த ஓவியங்களை சேதப்படுத்தினார் என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





