இலங்கை: அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய போராட்டத்திற்கு எதிராக கண்ணீர்புகை பிரயோகம்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.
ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து விஜேராம சந்தியை நோக்கி அனைத்துப் பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தினர் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கவே பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து பல்கலைக்காக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை கருத்திற் கொண்டு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை இன்று (17) முற்பகல் பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)





