தென் கொரியாவில் 8 வயது மாணவியை கொலை செய்த ஆசிரியைக்கு வழங்கப்பட்ட தண்டனை

தென் கொரியாவில் 8 வயது மாணவியை கொலை செய்ததற்காக பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
வகுப்பறையில் இருந்தபோது ஆசிரியை மாணவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
உயிரிழந்த மாணவியின் பெற்றோர் ஆசிரியை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
மேலும், கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் பாடசாலை ஆசிரியை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணையின் போது ஆசிரியை மனநல சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
(Visited 4 times, 4 visits today)