ஐரோப்பா செய்தி

ஏதென்ஸில் (Athens) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் டாக்ஸி ஓட்டுநர்கள்!

ஏதென்ஸில் (Athens) உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் (Taxi Drivers)  48 மணிநேர பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ekathimerini இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பேருந்துப் பாதைகளில் இலவச அணுகலை வழங்கவும், ஏதென்ஸ் (Athens)  மற்றும் தெசலோனிகியில் (Thessaloniki) புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட அனைத்து டாக்சிகளும் ஜனவரி 1, 2026 முதல் 2035 இற்கு இடையில்  முழுமையாக மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்ற காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான (Taxi Drivers) வரி இல்லாத வருமான வரம்பை ஆண்டுக்கு €12,000 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து வரும் வாரத்தில் அவர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!