ஒகஸ்ட் மாதம் முதல் வரிகள் நிச்சயம் நடப்புக்கு வரும் – டிரம்ப் அறிவிப்பு

உலக நாடுகள் மீது அறிவித்துள்ள வரிகள் ஒகஸ்ட் முதலாம் திகதி நிச்சயம் நடப்புக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு முழுமையாக உத்தரவாதம் தர முடியாது என அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்தால் வரிவிதிப்பைப் பின்னொரு திகதிக்கு ஒத்திவைக்கத் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான், தென்கொரியா ஆகியவை மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
தென்கொரியா அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி இணக்கமான தீர்வு காண விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
உற்பத்தித் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி அதன் முக்கிய துறைகளில் வளர்ச்சி காண திட்டமிட்டுள்ளதாகவும் தென் கொரியா குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)