குறைந்தபட்ச நீதியைக்கூட பெறமுடியாத நிலையில் தமிழர்கள் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் குறைந்தபட்ச நீதியைக்கூட பெறுமுடியாத நிலையிலேயே இந்த நாடு உள்ளதாக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய செய்கைகளுக்கான திகதிகள் குறிக்கப்பட்டுள்ளது.கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்லவேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளது.
ஆனால் மயிலத்தமடு,மாதவனைக்கு கால்நடைகளை கொண்டுசெல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்ந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
(Visited 14 times, 1 visits today)