தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை – சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
தமிழக முதலமைச்சரின் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கான தொடர்ந்த தமிழக அரசு குரல்கொடுக்கும் என இதன்போது மு.க.ஸ்டாலின் தமிழ்த் தேசிய பேரவையிடம் உறுதியளித்துள்ளார்.
இதன்போது கோரிக்கை கடிதமொன்று தமிழ்த் தேசிய பேரவையினரால் மு.க.ஸ்டாலினிடம் கையளிக்கப்பட்டது.






