தமிழகம்: கருவில் பெண் குழந்தை… சட்டவிரோதக் கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு!

புதுக்கோட்டை அருகே கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டறிந்து, கருவில் இருப்பது பெண் குழந்தை எனத் தெரியவந்ததால் கருக்கலைப்பு செய்துகொண்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பென்னாமராதியில் உள்ள தனியார் மருத்துவமனையை மூடி முத்திரை வைக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு தரக் கோரியும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
(Visited 26 times, 1 visits today)