தமிழகம் – தேர்தல் முடிவுகள் ;பின்னடைவை சந்தித்துள்ள பிரபலங்கள்
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. பின்பு, சுற்று வாரியாக வாக்குககள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கவனத்தை ஈர்த்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
* கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 62, 486 வாக்குகளை பெற்றுள்ளார்.
* தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் 41,156 வாக்குகளை பெற்றுள்ளார்.
* வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட மன்சூர் அலிகான் 618 வாக்குகளை பெற்றுள்ளார்.
* கடலூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்ட தங்கர் பச்சான் 95,261 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார்.
* கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வீரப்பனின் மகள் வித்யா ராணி 18,717 வாக்குகள் பெற்று 4ம் இடத்தில் உள்ளார்.
* மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட காளியம்மாள் 58,545 வாக்குகள் பெற்று 4ம் இடத்தில் உள்ளார்.
* விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 55,3706 வாக்குகளை பெற்றுள்ளார்.
* விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிட்ட விஜயபிரபாகரன் 1,43,490 வாக்குகளை பெற்றுள்ளார்
* ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 73,644 வாக்குகளை பெற்றுள்ளார்.
* பெரம்பலூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட பாரிவேந்தர் 65,744 வாக்குகளை பெற்றுள்ளார்.
* தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டி.டி.வி. தினகரன் 60,757 வாக்குகளை பெற்றுள்ளார்.