தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது

அரசு நடத்தும் மதுபான விற்பனை நிறுவனத்தில் (டாஸ்மாக்) நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஊழலைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முற்றுகை போராட்டத்திற்குச் செல்ல இருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 நிர்வாகிகள் வீட்டுக் காவலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட, சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கட்சியின் மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் மூத்த மாநிலத் தலைவர் எச். ராஜா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மகிளா மோர்ச்சா தலைவரும் கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சி. சரஸ்வதி, எம்.ஆர். காந்தி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் வினோஜ் பி. செல்வம், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.