“யார் எப்படி போனால் எனக்கென்ன” முன்னால் காதலன் குறித்து தமன்னா

முன்னணி நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகரான விஜய் வர்மா என்பவரை காதலித்து வந்தார் என்பதை நாம் அறிவோம். இருவரும் ஒன்றாக பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர்.
வெப் தொடர் ஒன்றில் 18+ காட்சிகளில் இருவரும் இணைந்து நடித்தது பெரும் சர்ச்சையானது. விரைவில் இருவருக்கும் திருமணம் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
தமன்னாவுடன் பிரேக் அப் ஆன பிறகு, பிரபல நடிகை பாத்திமா சனா சாய்க் உடன் விஜய் வர்மா தற்போது காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவிடம், “உங்கள் முன்னாள் காதலர் வேறொரு நடிகையுடன் சுற்றித்திரிகிறாராமே” என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமன்னா, “யார் எப்படி போனால் எனக்கென்ன” என சிரித்தபடி பதில் கூறினார். இவர் கூறியுள்ள இந்த பதில் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.