கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்ட திகதியில் மாற்றம்!
கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி வவுனியா வடக்கின் நெடுங்கேணி பகுதியில் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்தின் திகதி மாற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் முன்னெடுக்கப்படவிருந்த கவனவீர்ப்புப் போராட்டம், பெப்ரவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கின் பொது அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கமையவே திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





